நடிகை சோனாவின் மதுரவாயல் வீட்டில் இருவர் கத்தியுடன் மிரட்டி திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் இருவர், அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற போது, சோனாவின் நாய் குரைத்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது, திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், அவர்கள் இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். சோனாவின் புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் தற்போது நடிகை சோனா வீட்டில் திருட முயற்சித்த இரு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி லோகேஷ் (21), சிவா (23) ஆகிய இரு வாலிபர்கள் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் திருடும் நோக்கில் முயற்சி வீட்டுக்குள் நுழைந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.