உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகை சுருதிஹாசனுக்கு சாதனையாளர் விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சுருதிஹாசனுக்கு வழங்கினார். இந்த விருது பல்வேறு தளங்களில் இருந்து தேசத்திற்கு சேவை செய்ய வந்த குடிமக்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதை பெற்றதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.