“பிரபல நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா”…? உண்மைதான் என்ன…?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா பிரபல தயாரிப்பாளர் டிடிவி தனய்யாவின் மகனை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அதாவது கடந்த 20-ம் தேதி டிடிவி தனய்யாவின் மகனுக்கும், சமந்தா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இதை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் சமந்தாவுக்கும் டிடிவி தனய்யாவின் மகனுக்கும் திருமணம் நடந்துள்ளதாக கூறி வருகிறார்கள்.

Leave a Reply