பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சினிமா ஃபேஷன் டிசைனர் ஆக பணியாற்றிய சுசேனா கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். ஹிருத்திக் ரோஷன் அவருடைய மனைவியுடன் 14 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த விவாகரத்துக்கு பிறகு நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஹிந்தி நடிகை சபா ஆஷாத்தை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும் நிலையில் அடுத்த சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹிருத்திக் ரோஷன் நடிகை சபா ஆஷாத்தை இரண்டாவதாக திருமணம் செய்து அவருடைய 2 மகன்களும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.