பிரபல பஞ்சாபி மற்றும் இந்தி திரைப்பட நடிகரும் இயக்குனருமான மங்கள் தில்லான் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று காலமானார். சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலமானார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் புனியாத், விஸ்வத்மா போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். மங்கள் தில்லான் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.