பிரபல நடிகர் இன்னசென்ட் மருத்துவமனையில் கவலைக்கிடம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழில் லேசா லேசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.