பிரபல தொழிலதிபரான OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்தார். குர்கானில் தனது மனைவியுடன் வசித்து வந்த இவரின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 20 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரித்தேஷ் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தனது தந்தையை இழந்துள்ளார். அவரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.