நடிகை சமந்தா குஷி மற்றும் சீட்டாடல் வெப்சீரிஸ் முடித்த பிறகு நடிப்புக்கு ஒரே அடியாக பிரேக் கொடுத்துவிட்டு தன்னுடைய உடல் நலுக்காக மீண்டும் ஆன்மீக தியானம் செய்து நலம் பெற முயன்று வருகிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா விவகாரத்துக்கு பிறகு அடுத்தடுத்து பிசியாக நடித்து வந்த நிலையில் கணவரிடமிருந்து விவகாரத்தை பெற்று சில மாதங்களிலேயே உடல்நிலை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
சுமார் 7 மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று பிறகு உடல் நலம் தேறினார். இந்நிலையில் மயோசிடிஸ் சிகிச்சைக்காக தெலுங்கு முன்னணி ஹீரோவிடம் தான் 25 கோடி நிதியுதவி பெற்றதாக பரப்பப்பட்ட செய்திக்கு நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து பதிலளித்த அவர், “எனக்கென்று ஒரு தொழில் இருப்பதால் என்னால் என்னை எளிதாக கவனித்துக்கொள்ள முடியும். செய்திகளை வெளியிடும்போது தயவு செய்து பொறுப்பாக இருங்கள். இந்நோய்க்கு இவ்வளவு பெரிய தொகை தேவைப்படாது” என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.