பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் இன்று மாலை காலமானார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1985-ல் வெளியான சிறை படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்ற பாடலை எழுதி தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிறைசூடன். இதன் பின் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதுவரை இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் 1,400 பாடல்கள் எழுதியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பணக்காரன் படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல், செம்பருத்தி படத்தில் இடம்பெற்ற ‘நடந்தால் இரண்டடி’ போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.

மேலும் பிறைசூடன் திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது கவிதைகள், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார். சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் பிறைசூடன் பெயர் இடம் பெற்ற செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 4:15 மணி அளவில் பிறைசூடன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரையுலகத்தினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *