பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எம். முத்துராமன் இன்று அதிகாலை காலமானார். ராஜமரியாதை, மூடு மந்திரம், நலம்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். அவருக்கு வயது 84. அவர் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும், அனு என்ற மகளும் உள்ளனர். இவரது “ஒரு வீடு ஒரு மனிதன்” படத்திற்காக சிறந்த படத்திற்கான மாநில விருது கிடைத்தது. இவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *