கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது தளபதி 69 திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது பற்றி சிவராஜ்குமார் கூறும் போது தனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும் எனவே ரசிகர்கள் அதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. மேலும் இந்த தகவல் நடிகர் சிவராஜ்குமார் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.