பிரபல சுற்றுலா பயண டீக்கடைக்காரர்…. கேரளாவில் மரணம்….!!

கேரளா மாநிலம் கொச்சியில் கே.ஆர். விஜயன்(71) என்பவர் வசித்துவருகிறார். அவரது மனைவி மோகனா. இவர்கள் இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மோகனா தனது கணவனிடம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தில் தினமும் 300 ரூபாய் சேமித்து வைப்பது வழக்கமாகும். இந்த சேமிப்புமூலம் 2007ஆம் ஆண்டு இந்த தம்பதியர்கள் முதல்முறையாக இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். அதன்பிறகு தங்கள் சேமிப்பு மற்றும் சிறு கடன் உதவியுடன் கடந்த 14 ஆண்டுகளில் 26 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளனர்.

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு இந்த தம்பதியரின் பயணத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உதவி செய்துள்ளார். அதன் பிறகு இந்த தம்பதியரின் சுற்றுலா பயணங்கள் குறித்து தேசிய அளவில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் டீக்கடை நடத்தி தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது மனைவியுடன் கடைசியாக கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை ரஷ்யாவுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *