தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டாவில் சீரியல் நடிகர் சந்து என்பவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இவர் சமீபத்தில் சாலை விபத்தில் காயமடைந்ததாக தெரிகிறது. சந்துவுக்கு ஷில்பா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராதம்மா பெல்லி, கார்த்திகை தீபம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

சந்து நடிகை பவித்ரா ஜெயராமுடன் அவரது கணவராக திரிநயனி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நிலையில், சந்துவும் பவித்ரா ஜெயராமும் உண்மையில் பழகி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் சாலை விபத்தில் நடிகை பவித்ரா உயிரிழந்தார். பவித்ரா ஜெயராமின் திடீர் மறைவால் சந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்த வீட்டிலேயே தற்போது தற்கொலை செய்துள்ளார்.