பிரபலமான தொலைக்காட்சி தொடரான “சீதா ராமன்” பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. அண்மையில் இதில் இருந்து பிரியங்கா நல்காரி விலகியதை அடுத்து, சீதா வேடத்திற்கு செந்தூர பூவே புகழ் நடிகை ஸ்ரீநிதியை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

ஜீ தமிழில் மற்ற சீரியல்களை விட பார்வையாளர்கள் விரும்பி பார்க்கும் சீதா ராமன் சீரியலில் ஸ்ரீநிதி விரைவில் இணைவார். சீரியலில் தன் கதாபாத்திரம் பற்றி பேசிய நடிகை ஸ்ரீநிதி “சீதையாக நடிப்பதில் நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். இயக்குனர் பிரம்மா ஜி அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. தேவ் சார் எனக்கு இந்த நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.