பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள்…. வெளியான புகைப்படம்…..!!!!

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. இதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தையும் இயக்கி இருந்தார் சவுந்தர்யா. இதற்கிடையில் 2-வதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவை விட்டு விலகி இருந்து வருகிறார் சவுந்தர்யா.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோலுக்கு கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோருடன் சென்று சவுந்தர்யா சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர்களுக்கு அந்த கோயிலில் உள்ள சண்முகா விலாசத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் திருச்செந்தூர் கடலில் கால் நனைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பினர்.