“பிரபல இயக்குனர் படத்தில் கீர்த்தி சுரேஷ்”…. வெளியான தகவல்….!!!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தற்பொழுது ஆர்.சி.15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கின்ற நிலையில் கதாநாயகனாக ராம்சரண் நடிக்க கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு ராம் சரணுக்கு கியாரா அத்வானி ஜோடியாகவும் மற்றொரு ராம் சரணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறாராம். பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற சங்கர் திரைப்படத்தில் நடிப்பது என்றால் அனைவருக்கும் விருப்பம் தான். இந்நிலையில் அந்த வாய்ப்பானது தற்பொழுது கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காகிதம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *