பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு… கொரோனா உறுதி…!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்தியா கிரிக்கெட் வீரர் அக்ஸார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சக கிரிக்கெட் வீரர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் டெல்லி கேப்பிடல் அணியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.