புகழ்பெற்ற பாரம்பரிய இசைக் கலைஞர் துருபத் ஆச்சார்யா பண்டிட் லக்ஷ்மன் பட் தைலாங் (93) உடல் நல குறைவால் காலமானார். முழு வாழ்க்கையையும் இசைக்காக அர்ப்பணித்த இவர், பலருக்கும் இலவசமாக இசை கற்பித்தார். சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்த நிலையில் அதனை வாங்காமலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.