பிரபலமாவது எப்படி….? வா சொல்லி தாரேன்…. டிக் – டாக் பிரபலத்தால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!!

திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் வினீத் (வயது 25). இவர் கேரளாவில் ‘டிக்-டாக்’-கில் பிரபலமானவர். அவருக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். இந்த நிலையில் வினீத்துக்கு கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் நெருங்கி பழகி வந்தனர்.

அந்த சமயத்தில் கல்லூரி மாணவிக்கு டிக்-டாக்கில் பிரபலமடைவது எப்படி? என்பதை சொல்லி தருகிறேன் என கூறியுள்ளார். இதை நம்பிய கல்லூரி மாணவி அவர் கூறியபடி திருவனந்தபுரம் வந்தார். அங்கு இருவரும் சந்தித்தனர். அப்போது வினீத் கார் வாங்க போவதாகவும், அதற்கு முன் முகத்தை கழுவி செல்லலாம் என்று கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்றார்.

இந்தநிலையில் அங்கு கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வினீத்தின் செல்போனை அந்த மாணவி பார்த்தார். அப்போது வினீத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டார். இதுகுறித்தும், தான் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் தம்பானூர் போலீசில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *