இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும், ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் பேசும் பாஜகவுக்குத் தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறியுள்ளார்