பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் கோவில்….. நடைபெற்ற திருவிழா…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

மண்டு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சரத்குமார நதியில் சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் மண்டு மாரியம்மனுக்கு  பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான வழங்கப்பட்டுள்ளது.