வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு, பக்தர்களின் வசதிக்காக அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.