வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் – சாலிமார் வரையிலான ஒரு வழி பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில்  காட்பாடி, ஓங்கோல், ரேணிகுண்டா, விஜயவாடா, கிருஷ்ணராஜபுரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம் சாலை, புவனேஸ்வரம், விஜயநகரம், கட்டாக், கராத்தூர் வழியாக பிப்ரவரி 6-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சாலிமார் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.