பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் அன்றைய தினத்தை பசு அணைப்பு  தினமாக கொண்டாட ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேதகால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்பு நிலைக்கு சென்று விட்டதாக கூறியுள்ளது. இதற்கிடையே மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, பசுக்களை வழிபடும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தில் விலங்குகள் நல வாரியத்தின் அழைப்புக்கு மக்கள் ஆதரவளித்தால் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும் என கூறியுள்ளார். இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் தாங்கள் ஏற்கனவே வெளியிட்ட வேண்டுகோளை திரும்ப பெறுவதாக கூறியுள்ளது. இதனையடுத்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் உயர் அமைப்பின் உத்தரவின்படி வேண்டுகோள் வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாரியத்தின் செயலாளர் எஸ்.கே.தத்தா கூறியுள்ளார்.