உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் பயனர்களின் தேவையை கருதி யூடியூப் புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் youtube ஷார்ட்ஸ் வீடியோ ஆப்ஷன் கொண்டுவரப்பட்டது.

அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் முதல் யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பதிவிடுபவர்களுக்கும் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஷார்ட் வீடியோ பதிவிடுபவர்களுக்கு ஆயிரம் சப்ஸ்கிரைப்ர்கள் இருக்க வேண்டும் 90 நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஷார்ட் வீடியோக்களுக்கு இடையில் வரும் விளம்பரத்தின் வியூசுக்களை பொறுத்து பணம் கிடைக்கும் என அறிவித்துள்ளது.