இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படம் கடந்த 2015ல் வெளியாகி நஷ்டமடைந்தது. இந்நிலையில் அந்த பட நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக மீண்டுமாக லிங்குசாமி தயாரிக்கக்கூடிய திரைப்படத்தில் கமல் நடித்து உதவிசெய்ய இருக்கிறார்.

இது தொடர்பாக லிங்குசாமி கூறியதாவது ”உத்தமவில்லன் படத்தை திறமையாகவும், கடின உழைப்போடும் தான் எடுத்தனர். ஆனால் அந்த படத்தால் பெரிய அளவில் பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மை தான். இதன் காரணமாக உத்தமவில்லன் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என கூறி இருக்கிறார்” என்று அவர் கூறினார்.