தனக்கு பிடித்தமான நடிகர் துல்கர் சல்மான் தான் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். சீதாராமன் படத்தில் நடித்த போது தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்த அவர், துல்கர் சல்மான் அந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததாக கூறினார். அவர்தான் எனக்கு முன்னுதாரணம், எனது வழிகாட்டி, நண்பர் எல்லாம் அவர்தான் என நெகிழ்ச்சி தெரிவித்தார். துல்கரை அவர் பல இடங்களில் புகழ்ந்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.