சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” படம் கடந்த 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்திருக்கிறேன். கூடிய விரைவில் அனைவரிடமும் பேசுவேன் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இந்நிலையில் தான் 90% குணமடைந்து பிச்சைக்காரன்-2 திரைப் படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.