
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகி பரிசுத்தொகையை தட்டி சென்றார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நடிகர் அருண் நேரலை ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது அவரிடம் வீட்டிற்குள் இருந்தபோது அன்ஷிதா உங்கள் காதில் ஒரு ரகசியம் சொன்னாரே, அது என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருண் “அது ஒரு நல்ல விஷயம் தான் ஆனால் அதை சம்பந்தப்பட்டவர் வெளியில் சொல்லாமல் என்னால் எப்படி சொல்ல முடியும்.
அது சரி ஆகாது அல்லவா, அவர்களே சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று கூறிவிட்டார். அதோடு யாருக்கு என்ன நல்லது நடந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.