பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ‘பாகுபலி’ நடிகர்?.‌.. வெளியான மாஸ் தகவல்…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியை பிரபல நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலாவது சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும்  தொகுத்து வழங்கினர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் .

Rana Daggubati addresses rumours of ill health, says he is fine |  Entertainment News,The Indian Express

தற்போது 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ராணா தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘நம்பர் 1 யாரி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *