பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… கலகலப்பா வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பால் கேட்ச் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய எபிசோடில் தங்க நிற பந்துகளை பிடிக்க போட்டியாளர்கள் போராடினர். பின்னர் தங்க நிற பந்தை பிடித்தவர்கள் போர்டில் வைக்கப்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மாற்றியமைத்துக் கொண்டனர். இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர் ஹவுஸ் மேட்ஸ் . அனைவரும் ஆடல் , பாடல், கேக், பரிசுகள், உணவுகள் என கொண்டாடி மகிழ்கின்றனர் . இந்த வருடம் ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கியது. இதனால் பிக்பாஸ் வீட்டில் தீபாவளி , கிறிஸ்துமஸ் பண்டிகைகளை வரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து நியூ இயர் மற்றும் பொங்கல் பண்டிகை களையும் கொண்டாடும் வாய்ப்பு இந்த போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது.