விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விடும். தற்போது இந்த வாரம் கடைசி எலிமினேஷன் நடக்கப் போகிறது. யார் வெளியேறப்போகிறார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

சென்ற வாரம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆனார். இவர் பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததிலிருந்து கொண்டாட்டத்தில் இருக்கிறார். சமீபத்தில் ரச்சிதாவின் அம்மா சூப்பர் சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். அதை பார்த்த ரச்சிதாவும் சர்ப்ரைஸ் ஆகி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரச்சிதா தன் சமூகவலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.