விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தொடரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஜூன் மாதத்திலேயே தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.