பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா… இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தம்…!!!

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதேபோல் தெலுங்கு, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்து செம்பரம்பாக்கத்தில் இருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், நடிகைகளுக்கும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஊழியர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது.

Bigg Boss Malayalam Season 3 Launch Live Updates: Contestants List,  Participants Names, Live Streaming Online

இந்நிலையில் இந்த வாரம் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர்கள், நடிகைகள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் இதனால் இரண்டு வாரங்களுக்கு மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *