பிக்சட் டெப்பாசிட்…. வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்…. இதோ முழு விபரம்…!!!

வங்கிகளில் சமீப காலமாக பிக்சட் டெபாசிட்க்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பி.என்.பி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் பிக்சட் டெபாசிட்க்காண வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வங்கிகள் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரம் குறித்து பார்க்கலாம்.

கனரா வங்கி: கடந்த மாதம் 23-ஆம் தேதி கனரா வங்கி பிக்சர் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முடிவடையும் 2 கோடிக்கும் குறைவான பிக்சர்ஸ் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதமும், மற்றவர்களுக்கு‌ 2.90 முதல் 5.75 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

IDFC ஃபர்ஸ்ட் வங்கி: ஜூலை 1-ஆம் தேதி முதல் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமானது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள 2 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும், மற்றவர்களுக்கு 6.50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி: 3 வருடங்கள் அல்லது அதற்கு மேல் முதிர்ச்சி அடையும் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5.90 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வட்டி விகித அதிகரிப்பானது அமலுக்கு வந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி: கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் 2 கோடிக்கும் குறைவாக உள்ள பிக்சட்  டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 111 நாட்களுக்குள் முடிவடையும் பிக்சட் டெபாசிட்கள் மற்றும் 3 ஆண்டுகள் வரையுள்ள பிக்சட் டெபாசிட்டர்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎன்பி வங்கி: கடந்த 4-ம் தேதி முதல் 1 முதல் 3 வருடங்களுக்குள் முடிவடையும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமான தவணை தொகை கட்டணத்திலிருந்து 0.50% உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *