விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் ஜெயக்குமாரை வலைவீசி தேடிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்தனர்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இவரை சிறை காவலர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக பெருமாள் புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.