பால்கனியில் பெண்களின் கேவலமான செயல்… வைரலான வீடியோ காட்சி… நடவடிக்கை எடுத்த ஐக்கிய அரபு அமீரகம்…!!

பால்கனியில் பல பெண்கள் நிர்வாணமாக நிற்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல பெண்கள் பால்கனியில் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பது போல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படக் காட்சியை அண்டை வீட்டில் இருக்கும் நபர் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது இடங்களில் மது அருந்துவது, பெண்களுடன் சுற்றித் திரிவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அனைவருக்கும் தெரியும். அதனால் இது விளம்பரத்திற்காக எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்டுகிறது.

இதனிடைய காவல்துறையினர் பொது ஒழுக்க நெறிகளை தவறிய குற்றத்திற்காக அந்த வீடியோவில் இருக்கும் குடியிருப்பை கண்டறிந்து பெண்களை கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.