சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர். இந்த குழந்தையின் பெற்றோர் வெங்கடேசன்-ரம்யா. அதாவது கடந்த மாதம் 28ஆம் தேதி ரம்யா பால்கனியிலிருந்து உணவு  ஊட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கைத்தவறி குழந்தை பால்கனியில் விழுந்தது.

உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் மீட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரம்யா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ரம்யா திடீரென தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார். அதாவது குழந்தை தவறி கீழே விழுந்ததால் அவர்கள் சென்னையில் இருந்து காரமடைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் ரம்யா இருந்துள்ளார். இதன் காரணமாகத்தான் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.