பாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் மாளவிகா மோகனன் … முக்கிய கேரக்டரில் ‘மாஸ்டர்’ நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ள பாலிவுட் வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் மாளவிகா மோகனுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கும் வெப் தொடர் ஒன்றில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் .

தற்போது இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்தத் தொடரை ‘தி ஃபேமிலி மேன்’ பெட் தொடரை இயக்கிய ராஜ் – டி கே இயக்கவுள்ளனர். இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது ‌. மேலும் இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது .