பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ப்ரீத்தி ஜிந்தா. இவர் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம்  அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு பாலிவுட் திரையுலகம் சாதகமாக இல்லை.

மாறாக வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அவர்கள் தான் சினிமாவில் வளர முடியும் என்ற நிலை தற்போது அங்கு உள்ளது. திறமையானவர்கள் பலர் இருந்தாலும் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளை தாண்டி ஜெயிப்பது கஷ்டம். இங்கு  சினிமா வாரிசுகள் மட்டும்தான் நிலைக்க முடியும். சினிமா பின்புலம் இல்லாதவர்கள் எப்போதும் ஒருவித பயத்துடனே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ப்ரீத்தி ஜிந்தா இப்படி சொன்னது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.