பாலிவுட்டில் சக்சஸ்…. “விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்…. ஒரிஜினலை மிஞ்சியது…. குவியும் பாராட்டுக்கள்….!!

புஸ்கர் – காயத்ரி  இயக்கத்தில் வெளியான “விக்ரம்  வேதா” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புஸ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் கதிர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம் வேதா”. இயக்குனர் சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்துள்ளனர். மேலும் தமிழில் “விக்ரம் வேதா” படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி தான் இந்தியிலும் இயக்கியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள், திரையுலகினர் என பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. தமிழில் வெளியான “விக்ரம் வேதா” படத்தை போன்று ஹிந்தியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் படமாகவும் உருவாகியுள்ளது.  இந்த திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்தை இந்தி திரை உலகம் வியப்பில் பார்த்து வருகின்றது. இப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள  புஷ்கர் – காயத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.