தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க தமிழக அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அழைத்த பரிந்துரையில் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூகநீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். சமூகப் பிரச்சனைகள், சாதிய பாகுபாடு, பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர வேண்டும். B.Ed படிப்பிற்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.