பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி.. குடும்பத்தாரின் கொடூர செயல்..!!போலீசாரால் கைது .!!

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனுக்கு மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் கிராம மக்கள் கொடூரமாக தண்டனை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் 21 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞனுக்கு மட்டுமல்லாது சிறுமிக்கும் தண்டனை கொடுக்கும் விதமாக அடித்து பொது இடத்தில் வைத்து கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் மற்றும் சிறுமியை கொடுமைப்படுத்திய உறவினர்கள் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .