உலக அளவில் பாலியல் தொழிலில் பலர் ஈடுபட்டு வரும்  நிலையில் பல நாடுகள் அந்த தொழிலுக்கு அங்கீகாரம் கூட கொடுத்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாடு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது பாலியல் தொழிலாளிகளுக்காக மற்றொரு சலுகையையும் அறிவித்துள்ளது. அதாவது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு இனி மகப்பேறு விடுப்பு, இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்றவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் பாலியல் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக ‌ அங்கீகரித்ததோடு அதில் ஈடுபடுபவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளையும் பெல்ஜியம் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாலியல் தொழிலை கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த நாடு சட்டபூர்வமாக அங்கீகரித்த நிலையில் தற்போது இதுபோன்ற சலுகைகளை அறிவித்துள்ளது.

இது போன்ற சலுகைகளை அறிவித்த உலகின் முதல் நாடு பெல்ஜியம். முன்னதாக நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாலும் இப்படிப்பட்ட சலுகைகளை பெல்ஜியம் தான் வழங்கியுள்ளது. அதன்படி பாலியல் தொழிலாளிகளுக்கு மகப்பேறு விடுமுறை, அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ காப்பீடு, அதற்காக தனியாக விடுமுறை, மாத பென்ஷன் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அந்த நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.