பாலியல் தொல்லை…. 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி….!!!!

கோவையில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அதே பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தூய்மை பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பேசியுள்ளனர்.

இந்நிலையில் சரவணகுமார், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளிக்கு சென்ற சிறுமி சரவணகுமாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாததால் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை உடனே மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் சரவணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதான 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மாணவிக்கு டார்ச்சர் அளித்த கூலி தொழிலாளி ராமர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *