அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர் தடகளப் பெண் பயிற்சியாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சண்டிகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் மந்திரி சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதன் காரணமாக மந்திரி சந்தீப் சிங் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் விசாரணையில் உண்மைகள் அனைத்தும் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.