தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனராகத்தின் கீழ் 57 கல்லூரிகளும் 19,120 இடங்களும் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் https://www.tnpoly.in/என்ற இணையதளத்தில் 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.