பாலாற்றில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்….. தூய்மை பணிகள் தீவிரம்….!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், காட்பாடி என்சிசி பத்தாவது பாட்டாலியன் மாணவர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணியை செய்தனர். இதனை அடுத்து பாட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் சஞ்சய் சர்மா தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் சுந்தரம், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.