கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “வீர சிம்ஹா ரெட்டி”. இத்திரைப்படத்தில் ஹனி ரோஸ், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், துனியா விஜய், லால் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இப்படம் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் விசாகப்பட்டினம் சம்பவரம் பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தை மிகுந்த கொண்டாடத்துடன் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று திரையரங்கு திரை தீப்பிடித்து ஒரு பகுதி எரியத் துவங்கியது. கொண்டாட்டத்தின்போது உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் சில பேர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. எனினும் எப்படி திரை தீப்பிடித்தது என இதுவரை கண்டறியப்படவில்லை. அதனைத் தொடர்ந்து உடனே திரையரங்கில் இருந்து பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக சில ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
Safety Patichandi pic.twitter.com/Vg3F10At4T
— Milagro Movies (@MilagroMovies) January 12, 2023
Veera Simha Reddy show stopped due to throwing papers and cheering loudly in USA 🤯#VeeraSimhaReddy pic.twitter.com/T1oqAouqwQ
— Kerala Trends (@KeralaTrends2) January 12, 2023