அமேசான் காடுகளின் ஆழத்தில் சமீபத்தில் படமாக்கப்பட்ட ஒரு மாபெரும் அனகோண்டா  பாம்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் நீளம் வெறும் 8 விநாடிகளாக இருந்தாலும், ஹெலிகாப்டரில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதில், நீந்திக்கொண்டிருக்கும் கருப்பான அனகோண்டா  , அதன் அதிபெரிய உடலமைப்பால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை டாக்டர் ஷீதல் யாதவ், தனது X (முன்னர் Twitter) கணக்கில் பகிர்ந்ததிலிருந்து, வீடியோ பெரும் விரைவில் வைரலாகி வருகிறது.

இந்த பாம்பின் நீளம், எடை, அல்லது துல்லியமான இன வகை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும், இதற்கு முந்தைய மாதங்களில் அமேசானின் வேறு பகுதியிலான 26 அடி நீளமுள்ள Northern Green Anaconda வகை ஒரு புதிய அனகோண்டா  கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாம்பை கண்டுபிடித்தது, விஞ்ஞானி பிரொஃபசர் ஃப்ரீக் வொங் தலைமையிலான குழு ஆகும். அந்த வீடியோவும் உலகளவில் பரவலாகப் பகிரப்பட்டது.

 

இந்த வீடியோக்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், அமேசான் காட்டில் இன்னும் எத்தனையோ மர்மமான மற்றும் பெரும் உயிரினங்கள் மறைந்து இருக்கின்றன என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய நன்நீர் காட்டுகளில் ஒன்றான அமேசான், அதன் உயிரியல் செழிப்பாலும், இன்னும் முற்றிலும் ஆராயப்படாத விலங்குகளாலும், இன்றும் விஞ்ஞானிகள் மற்றும் இயற்கையைக் காதலிப்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.